Sri Krishna jayanthi
Sri Krishna jayanthi
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி :
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். திருமாலின் மிக முக்கியமான அவதாரம் , அதிகமானவர்களால் நேரசிக்கப்படும், போற்றி வணங்கப்படும் அவதாரம் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த பண்டிகை இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் நள்ளிரவில், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் என சொல்லப்படுகிறது. இதனால் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கோகுலாஷ்டமியாகும். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணர் செய்த லீலைகளும், அவர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை :
கிருஷ்ண ஜெயந்தியன்று காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். கிருஷ்ணரை நாமத்தை நெற்றியில் அணிந்து கொள்வதும் சிறப்பு ஆகும். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்காக நாம் தயாராக வைத்துள்ள கிருஷ்ணர் சிலை அல்லது கிருஷ்ணர் படத்தை பூஜையறையில் ஒரு பலகை வைத்து அதில் வைக்க வேண்டும்எந்தவொரு பூஜையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் விநாயகரை வணங்கி தொடங்குவதே இந்துக்களின் ஐதீகம் ஆகும். அதனால், இந்த பூஜையை தொடங்கும் முன் முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இலையில் வைக்க வேண்டும்.
படத்திற்கு பழங்கள், மலர்கள், அவல் பாயசம், தேங்காய், நெய்யினால் செய்த பலவிதமான இனிப்பு பலகாரங்கள், ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய் வாழையிலையில் வைப்பது மிகவும் சிறப்பு ஆகும்
இந்த பூஜைகளுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் விதமாக, கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் குழந்தைகளின் பாதம் சுவடு படிந்திருந்தால் கிருஷ்ணரே நம் வீட்டிற்கு விஜயம் செய்ததாக நம்பி அதை செய்கிறார்கள் பக்தர்கள். அதனால், குழந்தைகள் பாதச்சுவடு வீட்டின் உள்ளே வருவது போல படிந்திருந்தால் அது சிறப்பு என்பது தலையாய நம்பிக்கை
கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில் என்பதால் கிருஷ்ண ஜெயந்தி பூஜையை இரவு 11:30 துவங்கி அதிகாலை 12.30 மணிக்கே நிறைவு செய்ய வேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம்:
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடலாம்.