ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி


ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி


ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி ..

திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா

உன் மகிமைக்கு அளவில்லையே

உன் மகிமைக்கு அளவில்லையே

துணியில் கனிந்த பாபா

யோக மலரே பாபா

புண்முக தரிசனமே

ராம ரூபனே சாய் பாபா


ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி ..

குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்

தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய்

எத்தனை தவங்கள் பாபா

உன்னை காண பாபா

இக்கணம் உனை தொழுதோம்

தத்த ரூபனே சாய் பாபா


ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி ..

தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்

நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும்

வஞ்சனை இல்லா பாபா

நெஞ்சங்கள் எல்லாம் பாபா

சாயி வாழும் இடம்

பரப்ரம்மனே சாய் பாபா !!