Anna Abhishekam / அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்
ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் அனைத்து 27 நட்சத்திரங்கள் சந்திரனின் மனைவியர் ஆவர். அதில் ரோகிணி நட்சத்திரத்துடன் மட்டும் பெரியளவில் நாட்டமில்லாமல் இருந்தார். இதனை தன் தந்தையிடம் ரோகிணி கூறினார். இதனாலவரது தந்தை தட்சனால் உன் உடல் தேயட்டும் என சாபமிட்டார்.
அப்போது முதல் சந்திரனின் ஒவ்வொரு கலை குறையத்தொடங்கி பொழிவிழந்தது. பின்னர் அவர் தன் தவறை உணர்ந்து திங்களூரில் கைலாசநாதரை தன் சாபத்தை தீர்க்க வணங்கினார். சந்திரனின் 16 கலைகளில் மூன்று கலைகள் மட்டும் மீதமிருந்த நிலையில் சிவபெருமான் சந்திரனின் வேண்டுதலை ஏற்று அவருக்கு அருள் புரிந்தார். அந்த 3ம் பிறையை தன் தலையில் சூடினார். இருப்பினும் உன் சாபம் முழுமையாக நீங்காது. உன் பொழிவு முழுமையாக தேய்ந்து மறைந்து, பின்னர் படிப்படியாக வளர்ந்து பிரகாசித்து பின்னர் தேய்வதுமாக இருக்கும் என இருக்கும். என்னை சரணடைந்த இந்த ஐப்பசி மாத பெளர்ணமி மிக பிரகாசமாக இருக்கும் என அருளினார். அதன் காரணமாக ஐப்பசி மாத பெளர்ணமி மிக விசேஷமாக சிவாலயங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது. அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது. சிவ பெருமான் அன்ன அபிஷேக பிரியர். இவருக்கு ஐப்பசி பெளர்ணமி அற்புத தினத்தில் அன்ன அபிஷேகமும், பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.இந்த அற்புத தினத்தில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்கள் சேர்ந்ததால் ஆகிறது. பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ஐப்பசி பெளர்ணமி நாளில் முதலில் 5வகை பொருட்களால் அபிஷேகம் செய்து பின்னர், நன்கு வடித்து ஆறவைத்த தேவையான அளவு நீரை சேர்த்த அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். தற்போது அன்னபிஷேகத்தின் போது காய், கனிகள், அப்பள்ளம், வடை கூட சேர்த்து செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேக அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நேரத்தில் மிகவும் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அந்த அன்னத்தை கோயில் குளத்தில் அல்லது ஆற்றில் கரைத்துவிடுவர். அது நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகி விடும். அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது. அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும். நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும். அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்.